தமிழ்நாட்டில்
தேர்தல் கூட்டணி - 2024
நாம் அனைவரும் 2024ம் ஆண்டில் எதிர்கொள்ள இருக்கும்
நாடாளுமன்ற தேர்தலை, வழக்கமான சம்பிரதாய தேர்தலாக கருத கூடாது. ஏனெனில் ஒட்டுமொத்த
இந்தியாவின் எதிர்காலத்தையே நிர்ணயிக்க கூடிய தேர்தலாகவே அமைந்துள்ளது. தேர்தலின் முடிவை எதிர்நோக்கி கடந்த
சில ஆண்டுகளாகவே காஷ்மீரம் முதல் குமரி வரையில் பல வகையான அரசியல் சதுரங்க விளையாட்டுகள்
அரங்கேற்றப்பட்டு வருகி்ன்றன. நாம் தான் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையிலான தேர்தல்களையே
நாம் பார்த்து வந்த நிலையில், தற்போது யார் வெற்றி பெறக் கூடாது என்ற அடிப்படையில்
அரசியல் சதுரங்க ஆட்டங்கள் ஆடப்படுகின்றன. இந்த தேர்தலை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய
ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆளும் கட்சி கூட்டணியும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும்
பல்வேறு மாநில கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணியும் களம் கண்டாலும், இன்னும் சில கட்சிகள்
இரு அணியில் இடம் பெறாமல் உள்ளன. இந்த நிலையை கூட பாரதிய ஜனதா கட்சியே தனக்காக ஒரு
தனி அணியை உருவாக்கி வைத்துள்ளதாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும். இவர்கள் தேர்தலுக்கு
பிந்தைய நிலையில் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதே பாஜகவின் கணக்கு. குறிப்பிட்ட
பிரிவினரின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்பதை நன்கு அறிந்த பாஜக, தங்களுக்கு
எதிரான வாக்குகள் ஒருங்கிணைந்து விடக்கூடாது என்பதற்காகவே, எதிர் வாக்குகளை பிளவு படுத்தும்
வேலையை கணகச்சிதமாக நடத்தி வருகிறது. இதன் முடிவுகள் நூறு சதவீதம் சாதகமாக கிடைக்காவிட்டாலும்,
முடிந்தவரை எதிர்அணிக்கு போகும் வாக்குகளை பிரிக்கும் பணியில் குறிப்பிட்ட அளவவாவது
வெற்றியாக்கும் வேலையில் ஓரளவுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதே பாஜகவின் கணக்கு.
தமிழ்நாட்டை பொறுத்தவரை
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி 39 தொகுதிகளிலும் உறுதி செய்யப் பட்டது என்றும்,
அதிமுக-பாஜக கூட்டணி இணைந்தே தேர்தலை சந்தித்தாலும் குறிப்பிடும் படியான வெற்றி கிடைக்காது
என்றும், கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தினரின் வாக்குகள் அப்படியே திமுக
கூட்டணிக்கு போய்விடும் என்றும், தமிழ்நாட்டில் பாஜகவினரின் எதிர்மறை அரசியல் சதுரங்கம்
நிச்சயம் வெற்றியைத் தராது என்றே உளவு அறிக்கைகள் சில ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்துள்ளன.
இதன்பிறகு எடுக்கப்பட்ட முடிவின்படியே தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி முறிவு என்றும்,
தனித்து போட்டியிடுவது என்றும் இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டு காய்கள் நகர்த்தப்
படுகின்றன.
தமிழ்நாட்டைப்
பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றி என்பது தேர்தலுக்கு பின்னர்
பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பெரும் சிக்கலானதாக மாறிவிடும். இந்த நிலையை
தவிர்க்கவே அதிமுகவை தனி அணியாக போட்டியிடச் செய்து, திமுக கூட்டணியில் சீட் வாய்ப்பு கிடைக்காதவர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில்
சீட் கிடைக்காதவர்களை பிரித்து அதிமுக கூட்டணிக்கு கொண்டு வருவது என்றும், அவர்கள்
சார்ந்த வாக்குகளையும், முடிந்தவரை சிறுபான்மை வாக்குகளை திமுகவிடம் இருந்து பிரித்து
திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது என்பது தான் பாஜவின் திட்டம். இந்த திட்டமே தற்போது
அரங்கேறிவருகிறது.
திமுகவில் பொருளாதார
ரீதியாக வலுவாக உள்ள தலைவர்களுக்கு ரைடுகளால் பிரேக் போடுவது, அதிமுகவிற்கு சாதகமாக
சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பது உள்ளி்ட்ட நடவடிக்கைகள் தங்களுக்கு சாதகமாக வராவிட்டாவலும்,
திமுக கூட்டணிக்கு எதிராக கொண்டு போக முடியும் என்ற இலக்கின் படியே தேசிய ஜனநாயக கூட்டணியில்இருந்து
அதிமுக பிரிந்தது, தற்போது சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து அதிமுக தனது தரப்பு
காயை நகர்த்தி வருகிறது. அதிமுகவின் அரசியல்
முன்னெடுப்புகளும் இதை உறுதி செய்கின்றன.

Good article
ReplyDelete